வெளைஞ்ச நெல்ல விக்க முடியல, இந்த அரசும் கண்டுக்கமாட்டேங்குது என்ன தான் பன்றது? சோறு போடும் விவசாயின் போராட்டம்

Sep 03, 2021 10:56 AM 4054

மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மங்கைநல்லூர் அடுத்த தத்தங்குடி கிராமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத காரணத்தால், விவசாயிகள் சொந்த செலவில் தகரக் கொட்டகை அமைத்து நெல் மூட்டைகளுடன் காத்திருக்கின்றனர்.

பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comment

Successfully posted