தஞ்சை அருகே அணைக்கட்டை தூர்வார உத்தரவிட்ட முதல்வருக்கு விவசாயிகள் நன்றி!

Jul 02, 2020 03:58 PM 420

தஞ்சை அடுத்த ஆச்சம்பட்டி கிராமத்தில் உள்ள அயனாவரம் அணைக்கட்டை, 54 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், தூர்வார உத்தரவிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

இந்த ஏரியின் மூலம் 3 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி, அந்தப் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருவதால், ஏரியை தூர்வாரக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் 54 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சருக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Comment

Successfully posted