வெண்டைக்காய் விவசாயம் மூலம் அதிக லாபம் ஈட்டும் விவசாயிகள்

Oct 17, 2019 04:49 PM 147

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வெண்டை விவசாயத்தின் மூலம் விவசாயிகள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.

வேதாரண்யம் தாலுகாவில் உள்ள செம்போடை, புஷ்பவனம், நாகக்குடையான், பெரியகுத்தகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விளைச்சலுக்கு குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படும் வெண்டைக்காய் நல்ல லாபம் தருகிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் வெண்டை சாகுபடி விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 3 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் வெண்டைக்காய் ஏக்கருக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை லாபம் தருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Comment

Successfully posted