கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் தந்தை, மகள் தற்கொலை

Feb 12, 2020 06:05 PM 172

கடலூரில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மகளும், தந்தையும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் கண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பாவாடைசாமி என்பவரது மகள் சங்கீதா. சங்கீதாவிற்கும் புதுவையை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் வரதட்சணை விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் 3 அரை வருடங்களாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா மற்றும் அவரது தந்தை பாவடைசாமி ஆகிய இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்ததுடன், இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted