காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை,மகன் பத்திரமாக மீட்பு

Aug 03, 2019 08:15 PM 151

காவிரி ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தந்தை மகனை மீட்ட தீயணைப்பு வீரருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்செங்கோட்டை அடுத்துள்ள பட்லூர் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் ஏராளமானோர் புனித நீராடி வழிபாடு நடத்தினர். பழையபாளையம் பகுதியிலிருந்து வழிபாடு செய்ய வந்த திருமூர்த்தி மற்றும் அவரது மகன் கிருஷ்ணன் குளிக்க சென்றுள்ளனர். எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதைப்பார்த்து, பொதுமக்கள் கூச்சலிட அங்கிருந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் சிவக்குமார் மற்றும் மோகன் துரிதமாக செயல்பட்டு, நீரில் நீந்தி சென்று இருவரையும் பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைபார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தீயணைப்பு துறை அதிகாரிகளை வெகுவாக பாராட்டினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Comment

Successfully posted