4 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

Jan 27, 2020 12:52 PM 326

குடும்பத்திற்கு நல்லது நடக்கும் என கூறி கடந்த 4 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கடந்த 24ம் தேதி குழந்தைகள் அவசர உதவி எண்ணில் இருந்து புகார் ஒன்று வந்தது. அந்த புகாரில் 16 வயது சிறுமிக்கு அவரது தந்தையால் ஆபத்து என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆவடி அருகே உள்ள சிறுமியின் வீட்டிற்குச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
 
இதில் சிறுமியின் தந்தை அருள் தனது மகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பலமுறை பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது. இதனை யாரிடமும் கூறக்கூடாது என்றும் மகளை மிரட்டி வந்துள்ளார். மேலும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு அருள்  தனது மகளுக்கு பாலியல் தொல்லை செய்துவிட்டு கொல்லிமலைக்கு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்.  அருள் எங்கிருக்கிறார் என்று விசாரிக்க ஆரபித்தனர்.
 
விசாரணையில் அருள் தியானம் செய்ய நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு சென்றிப்பது தெரியவந்தது. இதையடுத்து அருளை கொல்லிமலையில் இருந்து வரவழைக்க மகளுக்கு உடல்நிலை சரியில்லை என சிறுமியின் தாயாரின் வாயிலாக காவலர்கள் சொல்ல சொல்லினர். இதை நம்பி ஆவடிக்கு வந்த அருளை மகளிர் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மது குடிக்கும் பழக்கமுடைய அருள் 10 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததும்.
 
அவரது மனைவிதான் வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றியதும் தெரிய வந்தது. மேலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கொல்லிமலைக்கு செல்வதாகவும், ஆயுள் கெட்டியாக மகளிடம் பாலியல் உறவு வைத்ததாகவும் அவர் காவல்துரையிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.இதையடுத்து அருளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர்  நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted