மகளின் நிலை கண்டு மனமுடைந்த தந்தை தற்கொலை!

Aug 21, 2020 09:34 PM 1639

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சித்தன்வாளூர் மேலக்குளக்குடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும், அவரது வீட்டருகே வசித்து வரும் கல்லூரி மாணவிக்கும் நெருக்கமான பழக்கம் இருந்துவந்த நிலையில், அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில சரவணன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், பாதிக்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, மகளின் நிலையைக் கண்டு மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட தந்தை.

Comment

Successfully posted