ரூ.40,000-க்கு 10 வயது மகனை அடமானம் வைத்த தந்தை!!

Aug 13, 2020 06:54 AM 296

புதுக்கோட்டை அருகே, 40 ஆயிரம் ரூபாய்க்கு 10 வயது சிறுவனை, பெற்றோர் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த குழந்தைராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 10 வயது சிறுவன் வைரவேல். பணத்தேவைக்காக, வைரவேலை அவனது தந்தை 40 ஆயிரம் ரூபாய்க்கு, ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரிடம் அடமானம் வைத்துள்ளார். முருகானந்தம் அச்சிறுவனை ஆடு மேய்ப்பதற்கு பயன்படுத்தியுள்ளார். தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர், வருவாய் துறையினர், காவல் துறையினர் உதவியுடன், கொத்தடிமை மீட்பு சட்டத்தின் கீழ் சிறுவனை மீட்டனர். சிறுவனை கொத்தடிமையாக பயன்படுத்திய முருகானந்தத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Comment

Successfully posted