தோல்வி பயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்: முதலமைச்சர்

Dec 06, 2019 12:41 PM 455

தோல்வி பயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தேர்தல் அறிவித்த பிறகு மக்களை சந்தித்து வெற்றி பெறாமல், திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் பேசி வருவதாக கூறினார். ஒவ்வொரு முறையும் அதிமுக அரசை குறை கூறுவதையே ஸ்டாலின் வழக்கமாக கொண்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Comment

Successfully posted