திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்: பக்தர்கள் சாமி தரிசனம்

Apr 20, 2019 08:41 AM 138

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தின் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவையொட்டி, பல்வேறு அலங்காரங்களில் தினந்தோறும் அம்மனின் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 16ம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து நேற்று அம்மனின் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Comment

Successfully posted