உத்தமபாளையத்தில் ஆற்றில் இருந்து உலோகத்தால் ஆன அம்மன் சிலை கண்டெடுப்பு

Dec 19, 2018 10:36 PM 649

உத்தமபாளையத்தில் ஆற்றில் இருந்து உலோகத்தினால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பிரசித்தி பெற்ற திருக்காளத்தீஸ்வரர் ஞானம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன் பகுதியில் உள்ள முல்லை பெரியாற்றில் இருந்து பழங்கால அம்மன் சிலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதை மீட்டெடுத்த மாவட்ட தாசில்தார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆட்சியருக்கு தகவல் அளித்துள்ளனர். ஒரு அடி உயரமும் 5 கிலோ எடையும் கொண்ட இந்த சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது ஆய்வுக்கு பிறகு தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

Comment

Successfully posted