டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து

Aug 17, 2019 06:17 PM 154

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டு தளங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு சிறப்புப் பிரிவுகள் உள்ளன. அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இந்த உயர்சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது வழக்கம். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் முதன்மைக் கட்டடத்தில் முதல்தளம், இரண்டாம் தளம் ஆகியவற்றில் தீப்பிடித்தது. இதனால் எழுந்த புகைமூட்டத்தால் அப்பகுதியே புகைமண்டலமாகக் காட்சியளிக்கிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மின்கசிவு காரணமாகத் தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. .

Comment

Successfully posted