தண்ணீருக்காக போடப்பட்ட போரிலிருந்து வெளியேவந்த தீக்குழம்பு

May 15, 2019 01:01 PM 161

மகாராஷ்டிரா மாநிலத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து தீக்குழம்பு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பிட் மாவட்டம் ஷிர்சல் கிராமத்தில் தண்ணீருக்காக ஆயிரத்து 200 அடிக்கு போர் போட்டுள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் நீருக்காக போடப்பட்ட துளையிலிருந்து தீக்குழம்புகள் வெளியே வந்தன. இதனால் போர் போட பயன்படுத்தப்பட்ட இயந்திரம் தீ பிடித்து எரிய துவங்கியது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அந்த வாகனமும் இயந்திரமும் முழுவதுமாக தீயில் எரிந்து எலும்புக் கூடானது. இருப்பினும் துளையிலிருந்து தொடர்ந்து தீக்குழம்பு வந்துக்கொண்டே இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Comment

Successfully posted