பாலக்கோடு அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது

Sep 10, 2019 06:06 PM 80

பாலக்கோடு அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பம் மீது உரசி தீ பிடித்ததில் 1 லட்சம் மதிப்புள்ள வைக்கோல் போர் எரிந்து நாசமானது. மேல்மருத்துவர் பகுதியில் இருந்து 5 டன் வைக்கோலை ஏற்றிக் கொண்டு, மேக்லாம்பட்டி கிராமத்திற்குக் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது தாழ்வான மின் கம்பி உரசியதில் வைக்கோல் தீ பற்றி எரிந்தது. அருகில் குடிசை வீடுகள் அதிகமிருப்பதை சுதாரித்து கொண்ட ஓட்டுநர் முனியப்பன் லாரியை வேகமாக ஓட்டி சென்று ஊருக்கு வெளியே உள்ள காலி நிலத்தில் நிறுத்தினார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை நெடுநேரம் போராடி அனைத்தனர். இதில், வைக்கோல் முழுவதுமாக எரிந்து நாசமானது. 

Comment

Successfully posted