ஈரம், வீரம் கொண்ட படை - தீயை பொசுக்கும் சுடர்கள்

May 04, 2021 05:57 PM 603

தன்னலமற்ற சேவை, அசாதாரண பங்களிப்பு, விதிவிலக்கான தைரியம் இதுதான் தீயணைப்பு வீரர்களின் தாரக மந்திரம். சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமான இன்று ஈரமும், வீரமும் நிறைந்த தீயணைப்பு வீரர்கள் குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

1999 ஆண்டு ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயைக் அணைக்க முற்பட்டப்போது, 5 தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கி வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுக் கூறும் வகையில் மே 4 ஆம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஒரு நாட்டின் எல்லைப்பகுதியில் ராணுவப் படை எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு நாட்டிற்குள் தீயணைப்பு படை முக்கியம். உயிர், உடைமைகளை பஸ்மமாக்கும் தீ விபத்து, உயிரை உறிஞ்சும் விஷ வாயு தாக்குதல், கட்டடங்களை விழுங்கும் பூகம்பம், ஊரையே சுற்றிப்போடும் வெள்ளம் என எந்த இயற்கை பேரிடரானாலும் இவர்களின் பணி அளப்பரியது.

தங்கள் உயிரை துச்சமாக மதித்து பிற உயிரைக் காக்கும் தன்னலமற்ற இவர்களுக்கு, வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் பெரிய உடைகள், ஷூ, கையுறை, தலைக்கவசம் ஆகியவைதான் தற்காப்பு கருவி. தொலைபேசியில் 101 எண்ணை டயல் செய்த அடுத்த கனமே, 101 கிலோ மீட்டர் வேகத்தில் சைரன் ஓசையை எழுப்பியப்படியே சம்பவ இடத்திற்கு விரையும் சிகப்பு நிற வண்டி.


தீயணைப்பு வாகனங்கள் பொதுவாக சிகப்பு நிறத்தில் இருக்க காரணம் தீ மற்றும் ஆபத்து என்பதற்கான அடையாளமாக கருதப்படுகிறது. இந்த வாகனத்திற்குள் 25 வகையான மீட்புக்கருவிகள் இருக்கும், அசம்பாவித சம்பவத்தை பொறுத்து இவர்களின் மீட்பு யுக்தியும், உபகரணங்களும் மாறுபடும். குறுகிய தெருக்கள் முதல், உயர்ந்த கட்டடங்கள் வரை தீயை அணைப்பதற்கு வெவ்வெறு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தங்கள் உயிரை பணயம் வைத்துப் பிற உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றும் வீரமும், ஈரமும் நிறைந்த இவர்களின் உன்னத பணியை இந்நாளில் நினைவுகூர்வோம்.

1999 ஆண்டு ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயைக் அணைக்க முற்பட்டப்போது, 5 தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கி வீரமரணம் அடைந்தனர்

அவர்களின் தியாகத்தை நினைவுக் கூறும் வகையில் மே 4 ஆம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது

தீயணைப்பு வாகனங்கள் பொதுவாக சிகப்பு நிறத்தில் இருக்க காரணம் தீ மற்றும் ஆபத்து என்பதற்கான அடையாளமாக கருதப்படுகிறது

தீயணைப்பு வாகனத்தில் 25 வகை மீட்புக்கருவிகள் இருக்கும்; அசம்பாவிதத்தை பொறுத்து மீட்பு யுக்தியும், உபகரணங்களும் மாறுபடும்

உயிரை பணயம் வைத்துப் பிற உயிர்களை காப்பாற்றும் வீரமும் ஈரமும் நிறைந்த இவர்களின் உன்னத பணியை இந்நாளில் நினைவுகூர்வோம்

 

Comment

Successfully posted