மருதமலை வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ

Apr 14, 2019 12:25 PM 106

மருதமலை வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை, தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே 100 டிகிரிக்கும் மேல் வெயில் நிலவி வருகிறது. இந்த வெயிலின் காரணமாக கோவை அருகே, மருதமலை மற்றும் மாங்கரை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வசிக்கக்கூடிய மலைக்கிராம மக்களின் உதவியுடன், தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. பின் பல மணிநேர போராட்டங்களுக்குப்பின், தீயை கட்டுப்படுத்தி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted