சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் போராட்டம்

Feb 11, 2019 03:40 PM 108

சிவகாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின் படி பட்டாசு தொழிற்சாலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வந்த 8 லட்சத்திற்கும் மேலான மக்கள் உரிய வருவாய் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பட்டாசு ஆலைகளை திறப்பது, சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசுத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

Comment

Successfully posted