முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-மே.தீவுகள் அணி வீரர்கள் தீவிர பயிற்சி

Dec 13, 2019 03:03 PM 260

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் வரும் ஞாயிறுக் கிழமை தொடங்குவதை முன்னிட்டு இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதனை அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் வரும் ஞாயிறு அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் காலை முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். 20 ஓவர் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், ஒரு நாள் தொடரை தன்வசப்படுத்தும் முயற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், ஒரு நாள் தொடரையும் கைப்பற்றும் முயற்சியில் இந்திய அணியும் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

Comment

Successfully posted