முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சவுத்தாம்டன் நகரில் இன்று தொடங்குகிறது!!

Jul 08, 2020 09:46 AM 587

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சவுத்தாம்டன் நகரில் இன்று தொடங்குகிறது.

கொரோனாவால் தடைபட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான, டெஸ்ட் போட்டியின் மூலம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. சவுதாம்டனில் நடைபெறும் இந்த போட்டியில், வீரர்களுக்கு நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில், களத்தில் தொடுதலை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளன. தொற்று பரவலை குறைக்கும் நோக்கில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டும், மேற்கிந்திய தீவுகள் அணியில் டேரன் பிராவோ, ஹெட் மயர் பங்கேற்காதது இரு அணிகளுக்கும் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted