ஜல்சக்தி அமைச்சகத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது

Jun 11, 2019 12:15 PM 154

மத்திய அரசால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜல்சக்தி அமைச்சகத்தின் முதல் கூட்டம் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தின் சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூட்டத்தில் பங்கேற்கிறார். மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீடு மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

தமிழகத்தின் சார்பில் மேகதாது அணை விவகாரம் எழுப்பட உள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் வறட்சி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளும், தங்கள் மாநிலங்களில் நிலவும் நதிநீர் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

Comment

Successfully posted