நாளை முதல் ரேஷன் டோக்கன் விநியோகம்!

May 28, 2020 10:08 AM 1701

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கான டோக்கன் நாளை முதல் வரும் 31ஆம் தேதி வரை வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் விலையில்லா பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும் பொதுமக்கள் விலையில்லா பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

Comment

Successfully posted