மேட்டூர் அணையில் அதிகளவில் சிக்கும் சக்கர் மீன்களால் மீனவர்கள் கவலை

Feb 13, 2020 11:22 AM 442

மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் அதிக முள்களைக் கொண்ட டேங் கிளீனர் எனப்படும் சக்கர் மீன்கள் அதிகளவில் சிக்குவதால் வலைகள் சேதம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேட்டூர் அணையில் தானாக உற்பத்தியாகும் மீன்களைத் தவிர மீன் விதைப் பண்ணை மூலம் ஆண்டுதோறும் ரோகு, கட்லா மிர்கால் வகை மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு மேட்டூர் அணையில் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது.

இங்கு கூட்டுறவு சங்கம் மூலம் உரிமம் பெற்றுள்ள 2 ஆயிரம் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது டேங்க் கிளீனர் எனப்படும் சக்கர் மீன்கள் அதிகளவில் நீர்தேக்க பகுதியில் பிடிபட்டு மீனவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வகை மீன்கள் தமிழக - கர்நாடக எல்லையான அடிபாலாறு பகுதியில் அதிக அளவில் சிக்குகின்றன. இவற்றின் உடல் முழுவதும் முள் இருப்பதால் வலைகள் சேதம் அடைவது மட்டுமின்றி அதனை எடுக்கும் போது தங்களது கைகளில் காயம் ஏற்பட்டு மிகுந்த துன்பத்திற்கு ஆளாவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Comment

Successfully posted