திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 77 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- ஆட்சியர்

Nov 12, 2018 12:36 PM 434

திருவள்ளூரைச் சேர்ந்த 77 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ள நிலையில், வரும் 15-ம் தேதி அன்று தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகம் மீனவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் 9444317862, 9444317863 எண்களிலும், 1077 என்ற இலவச எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted