கடப்பாவில் ஆன்லைன் மோசடி செய்த 5 பேர் கைது

Dec 08, 2019 06:55 AM 321

ஆந்திரா மாநிலம் கடப்பாவில் ஆன்லைன் மோசடி மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கேமரூன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்...

கடப்பாவை சேர்ந்த அப்துல் கரீம் என்பவர் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து பத்தாயிரம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்து விட்டதாக காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர். இந்தநிலையில் கடப்பாவில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் ஐந்து பேர் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அங்கு நடத்திய சோதனையில் கேமரூன் நாட்டை சேர்ந்த இரண்டு பேர், உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஏழு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், மூன்று லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Comment

Successfully posted