தஞ்சாவூரில் ரூ.14.90 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

Jul 20, 2019 06:16 PM 58

தஞ்சாவூரில் 14 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த வழக்கில் 657 கிலோ மீட்டர் வரை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து துப்பாக்கி முனையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சையில், தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிற்கு வங்கியிலிருந்து 14 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை வியாபாரி ஒருவர் காரில் எடுத்து சென்றார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வேறொரு காரில் வந்த மர்மநபர்கள் பணத்தை வழிப்பறி செய்து தப்பினர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 657 கிலோ மீட்டர் வரையிலான சிசிடிவி கேமராக்கள் சோதனை செய்யப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

வழக்கில் சம்பந்தபட்ட குற்றவாளிகள் 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted