பறக்காத பறவைகள்

Dec 10, 2018 01:03 PM 1419

 

பறவை என்ற பெயரே அவற்றின் பறக்கும் தன்மையை முன்னிட்டு வழங்கப்பட்ட காரணப்பெயர்தான். ஆனால் பறக்காத பறவைகளும் உலகில் உண்டு. அவை

தென் ஆப்பிரிக்காவில் உள்ள நெருப்புக்கோழிகள்,

ஆஸ்திரேலியாவிலுள்ள ஈமு,

நியூசிலாந்திலுள்ள கிவி,

அண்டார்டிக் பகுதியில் வசிக்கும் பெங்குவின்,

தென் அமெரிக்கா கண்டத்தில் வாழும் டினாமோஸ்

அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளிலும், மெக்சிகோவிலும் காணப்படும், ‘ரோடு ரன்னர்’

மொரீஷியஸ் தீவுகளில் வாழ்ந்த  டோடோ (அழிந்துவிட்டது)

இதில் சில பறப்பதை விட்டு விரைவாக  ஓடுகின்ற தகைமை உள்ளவை.

இந்தப் பறவைகளுக்குச் சிறகு இருந்தும், ஏன் பறக்க முடியவில்லை என்பது ஒரு புரியாத புதிராகவே இன்னும் உள்ளது. பொதுவாக இப்பறவைகள் ஒருகாலத்தில் பறந்து திரிந்து கொண்டிருந்தன. காலப்போக்கில் நிலத்தில் அவைகள் வசிக்குமிடத்தில் எந்தவிதப் பகைவர்களும் இல்லாததால் இறக்கைகளைப் பயன்படுத்துவது படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்துவிட்டது.

பறவைகளின் மரபுவழி அவற்றின் சந்ததிகளுக்கும்  பலமற்ற பயன்பாடு குறைந்த சிறகுகள் அமையப்பெற்றிருக்கும் என்று பறவைகள் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்

Comment

Successfully posted