இங்கிலாந்தில் வெள்ளப்பெருக்கு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Feb 18, 2020 10:02 AM 270

இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் டென்னிஸ் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. டென்னிஸ் புயல் காரணமாக இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், ஸ்டாஃபோர்ட்ஷைர், ஹியர்ஃபோர்ட்ஷைர், வோர்செஸ்டர்ஷைர் போன்ற நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இங்கிலாந்தில் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இதேபோன்று ஜெர்மனியில் டென்னிஸ் புயல் காரணமாக, பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளதுடன், மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

Comment

Successfully posted