பவானி ஆற்றில் வெள்ளம்: வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

Oct 20, 2019 10:54 AM 123

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளம் சீறி பாய்வதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழையால் உபரி நீர் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடசப்பாளையம் பகுதியில் பரிசில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted