பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியை முன்னிட்டு பூத்து குலுங்கும் வண்ண மலர்கள்

May 26, 2019 06:59 PM 91

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியை முன்னிட்டு பூத்து குலுங்கும் வண்ண மலர்களை காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானலில் பல சுற்றுலா தளங்கள் இருந்தாலும் அனைவரது மனதையும் கவரும் விதமாக அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில், வரும் 30ம் தேதி தொடங்கி, ஜூன் 10ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக மலர் செடிகளில் பல்வேறு நிறங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. டேலியா, ரோஜா, ஜினியா, டயான்தஸ், பெட்டூனியா கோலியஸ், ஆண்ட்ரியம், டெல்பினியம், ஆப்ரிகன் மேரி போன்ற மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன. பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களை ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.

Comment

Successfully posted