புதுச்சேரியில் மலர் கண்காட்சி தொடங்கியது - பொதுமக்கள் வருகை குறைவு!

Feb 06, 2021 03:26 PM 1077

புதுச்சேரியில் மலர் கண்காட்சி துவங்கிய நிலையில் பொதுமக்களின் வருகை குறைவாகவே காணப்படுகிறது.

image

புதுச்சேரியில் வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்பில் மலர் மற்றும் விவசாய பொருட்கள் கண்காட்சி, இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதற்காக ரோஜா, செம்பருத்தி, சூரியகாந்தி, சாமந்தி உட்பட பல்வேறு பூக்களை கொண்டு பட்டாம்பூச்சி, கார் உள்ளிட்ட வடிவங்களில் மலர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகைக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், குறைந்த அளவிலான பார்வையாளர்களே கண்காட்சிக்கு வருகை தந்தனர். அதேநேரம் கூட்டம் அதிகம் இல்லாததால், அனைத்து இடங்களையும் பொறுமையாக கண்டு ரசித்ததாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

 

 

Comment

Successfully posted