ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் விலை அதிகரிப்பு

Sep 10, 2019 05:55 PM 197

கேரள மக்களின் பராம்பரிய ஓணம் பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக நாளை கொண்டாப்படவுள்ளது. ஓணம் பண்டிகைக்காக வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகளில் விதவிதமான பூக்களை கொண்டு கோலமிட்டு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையால மக்கள் பூக்கள் அதிக அளவு வாங்குவார்கள் என்பதால், கோவை பூ மார்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, முல்லை பூ கிலோ 320 ரூபாயும், ஜாதிப்பூ கிலோ 280 ரூபாயும், மல்லிகைப்பூ கிலோ 600 ரூபாயும் விற்கப்படுகிறது.

பூ மார்க்கெட்டில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பப்படுவதாகவும், ஓணம் பண்டிகையால் நல்ல லாபம் கிடைத்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பூக்களின் வரத்து அதிகமாக காணப்படுவதோடு, மல்லிகை பூ உள்ளிட்ட அனைத்து விதமான மலர்களின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 600 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ விலை, 400 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 1000 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதனால் மல்லிகைப்பூ பயிரிடும் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Comment

Successfully posted