14 நாட்களுக்கு பிறகு குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை துவங்கியது

Nov 30, 2019 12:31 PM 454

மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று துவங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 15ம் தேதி பெய்த கன மழையால், மலை ரயில் செல்லும் பாதைகளில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால், சீரமைப்பு பணிகளுக்காக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் போக்குவரத்து வழக்கம் போல் மீண்டும் இன்று துவங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Comment

Successfully posted