உள்ளாட்சித் தேர்தல்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Sep 15, 2019 07:06 AM 2322

 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

உதகையில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா சிகரத்தின் செப்பனிடப்பட்ட புதிய சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுமார் ஒரு கோடியே 89 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட சாலையை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும் தொலைநோக்கு கருவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். கடந்த 3 மாதங்களாக தீவிரமாக நடைபெற்று பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் அரசிற்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளதாக கூறினார்.

Comment

Successfully posted