இஸ்லாமியர்களுக்காக முதலில் குரல் கொடுப்பேன் - ரஜினிகாந்த்

Feb 05, 2020 09:30 PM 354

இஸ்லாமியர்களுக்கு ஆபத்து வந்தால் முதலில் குரல் கொடுப்பேன் எனக் கருத்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த், திமுக மீது நேரடி தாக்குதலை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தவறான வழியில் போராட்டங்களைத் தூண்டிவிடும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களைப் பகடைக் காயாக பயன்படுத்தி அரசியல் லாபம் தேடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்போது பிப்ரவரி 2 ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் என்கிற மாயப் போர்வையில், திசை திருப்பும் வேளையையும் செய்து வருகின்றனர். இந்தநிலையில், சிஏஏ வுக்கு ஆதரவாக பேசியுள்ள நடிகர் ரஜினிகாந்த், இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுப்பேன் என்றும், மதபோதகர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழி நடத்தலில் சிக்கி விடாமல் ஆராய்ந்து செயல்படவேண்டும்" எனவும் அறிவுரை கூறியுள்ளார்.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்துக்காக மதவாதத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், ரஜினிகாந்தின் இந்த பேட்டி, திமுக மீது நேரடி தாக்குதலை காட்டுகிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Comment

Successfully posted