பொங்கலுக்கான ரயில் டிக்கெட் நாளை முதல் முன்பதிவு

Sep 11, 2019 06:22 AM 305

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

2020ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் நாளை முதல் தொடங்குகிறது. நாளை காலை 8 மணி முதல், ஜனவரி 10ஆம் தேதியன்று சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 11ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 13ஆம் தேதியும், ஜனவரி 12ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜனவரி 13ஆம் தேதி செல்ல செப்டம்பர் 15ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 16ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோன்று ஜனவரி 15 ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 17ஆம் தேதியும், ஜனவரி 16ஆம் தேதி செல்பவர்கள் செப்டம்பர் 18ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 17ஆம் தேதி செல்ல செப்டம்பர் 19ஆம் தேதியும், ஜனவரி 18ஆம் தேதி ஊருக்கு செல்ல செப்டம்பர் 20ஆம் தேதியும் முன்பதிவு செய்ய முடியும். ஜனவரி 19ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் செப்டம்பர் 21 ஆம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted