ராஜநாகத்துக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்த இளைஞர்

Nov 09, 2019 09:05 AM 184

இரண்டு இளைஞர்கள் ராஜ நாகப்பாம்பிற்கு முத்தம் கொடுக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது...

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் ,அதுவும் ராஜநாகம் என்றால் கேட்க வேண்டாம், அப்பேர்பட்ட ராஜநாகத்தையே வளைத்துப் பிடித்து இரண்டு இளைஞர்கள் செய்யும் அட்டகாச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு இளைஞர் அமைதியாக நிற்க , இன்னொரு இளைஞர் கையில் எந்த ஆயுதமுமின்றி அந்த 15 அடி நீள ராஜநாகத்தைப் பிடிக்க முயல்கிறார். அந்த ராஜநாகம் இருவரையும் கொத்த உஸ், உஸ் என தன் தலையை மின்னல் வேகத்தில் ஆட்டி, முயற்சிக்கிறது. ஆனால் அந்தப் ராஜ்நாகத்துக்கே இருவரும் தண்ணி காட்டுகிறார்கள்..

கடைசியில் அந்த பாம்பு அப்பாவியாக நிற்க அந்த பாம்பின் வாயில் லிப் டு லிப் கொடுத்து பார்ப்போரின் பல்சை எகிற வைக்கிறார்... பாம்பு கடுப்பாகி கபளீகரம் செய்யும் என எதிர்பார்த்தால், அது தான் நடக்கவில்லை.. வெட்கப்பட்டுக்கொண்டு தலை குனிந்தபடி அங்கிருந்து புறப்பட்டது.

Comment

Successfully posted