காணும் பொங்கலுக்கு 480 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Jan 14, 2020 03:38 PM 288

காணும் பொங்கலுக்காக சென்னையில் 480 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காணும் பொங்கலை முன்னிட்டு வருகிற 17ஆம் தேதி, சென்னையில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு மக்கள் சிரமமின்றி சென்று வர 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, விஜிபி கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, பெசன்ட் நகர், பிராட்வே, தாம்பரம், முட்டுக்காடு, கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல் சுற்றுலாப் பொருட்காட்சி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted