வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம்!!!

May 27, 2020 03:55 PM 13620

தமிழகத்தில் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்த நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்குகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின. நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted