டிரம்பை கேலி செய்த கனடா அதிபர்

Dec 06, 2019 04:42 PM 1513

நேட்டோ மாநாட்டின் போது, கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கெல் உள்ளிட்ட நான்கு நாட்டு தலைவர்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கேலி செய்து பேசிய வீடியோ இணையத்தில் பரவலாக பேசபட்டது.

தற்போது லண்டனில் நேட்டோ நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. நேட்டோவில் நிரந்தர உறுப்பினர், தனிப்பட்ட உறுப்பினராக இருக்கும் 29 நாடுகள், இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளது. லண்டலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது

இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில்தான், டிரம்ப், மற்ற நாட்டு தலைவர்களால் கிண்டல் செய்யப்பட்டு இருக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கெல் ஆகியோர், தனியாக சந்தித்து ஆலோசனை செய்தனர். அதன்பின், 40 நிமிடம் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு டிரம்ப் பதில் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலோசனைக்கு பின் வெளியே வந்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கெலிடம், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏன் இவ்வளவு நேரம் தாமதம் என கேட்க ? அதற்கு ட்ரூடோ, "40 நிமிடங்கள் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பால் அவர் தாமதமாக வந்துள்ளார்,"என தெரிவித்துள்ளார். அதற்கு, பிரான்சு அதிபர் ஏதோ பதில் கூறுகிறார். இதனால் அங்கிருந்த தலைவர்கள் நான்கு பேரும் சிரித்தனர். டிரம்பை கிண்டல் செய்யும் விதமாக அவர் இப்படி குறிப்பிட்டார். இதை கேட்டு அங்கிருந்த நெதர்லாந்து அதிபரும் சிரித்தார்.

இந்த நிகழ்வு வீடியோவாக வெளியானது, இவர்கள் நான்கு பேரும் அமெரிக்க அதிபர் டிரம்பை இப்படி கேலி செய்து பேசியது, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இவர்கள் யாருக்கும் பேசுவது பதிவு செய்யப்படுவதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இந்த நிகழ்விற்கு பதில் கூறும் அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா பிரதமர் ட்ரூடோ இருமுகம் கொண்டவர் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே டிரம்ப் மீது வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த நிகழ்வு அதிபர் டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted