அர்த்தநாரீஸ்வரர் மலைகோயிலில் காட்டுத் தீ

Mar 11, 2019 08:56 AM 284

நாமக்கலில் அர்த்தநாரீஸ்வரர் மலைகோயிலில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைகோயிலின் மலைப் பகுதியில் இரவு 8 மணிக்கு மரங்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் தீ மளமளவென பல்வேறு இடங்களுக்கும் பரவி தீ பிடித்து எரிந்தது. அப்பகுதிகளில் தொடர்ந்து காற்று பலமாக வீசுவதால் தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் ஒரு சிறிய பகுதியை மட்டும் அணைத்துள்ளனர். காற்று அதிகமாக வீசுவதால் தீ மேலும் பரவும் அபாயம் உள்ளதாக தெரிகிறது. தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

Comment

Successfully posted