மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

Aug 13, 2018 11:17 AM 440
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின் போது மக்களவை சபாநாயகராக பதவி வகித்தவர் சோம்நாத் சாட்டர்ஜி. சிறுநீரக கோளாறு காரணமாக 2 மாதங்களுக்கு முன்பு கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், கடந்த 8ஆம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.  இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சோம்நாத் சாட்டர்ஜி காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

Comment

Successfully posted