முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்பட 7 பேர் அதிமுகவில் மீண்டும் இணைந்தனர்

Jul 17, 2021 09:04 AM 2163

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்பட 7 பேர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தனர்.

சாத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் சில மாதங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார். இந்த நிலையில், மீண்டும் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்த அவர், சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்பு அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்டார்.

அவருடன், அமமுகவில் இருந்து விலகிய வெம்பகோட்டை ஒன்றிய துணை தலைவர் ராம்ராஜ் பாண்டியன், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், சாத்தூர் முன்னாள் நகர செயலாளர் வாசன், நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர் சந்திரன், சிவகாசி மாவட்ட கவுன்சிலர் வெங்கடேஷ் ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.

அவர்கள் 7 பேருக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.

இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனிருந்தார்.

Comment

Successfully posted