பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மலர் தூவி மரியாதை

Sep 15, 2021 06:02 PM 1419

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை கட்சி அலுவலகத்தில், பேரறிஞர் அண்ணாவின் திருவுருப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அண்ணா படத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட கழக நிர்வாகிகளும் பேரறிஞர் அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கழக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, அஇஅதிமுக இலக்கிய அணி மாநில செயலாளர் வைகைச்செல்வன் மரியாதை செலுத்தினார். தனது இல்லத்தில் பேரறிஞர் அண்ணாவின் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

Comment

Successfully posted