நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் திறப்பு

Feb 12, 2019 07:38 AM 261

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திறக்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உருவப் படத்தை திறந்து வைக்கவுள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 1996, 1998-99 மற்றும் 1999-2004 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக பதவி வகித்தார். இவரது ஆட்சி காலங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார். வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக நாடாளுமன்ற வளாகத்தில் அவரது உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

Comment

Successfully posted