முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

Aug 17, 2018 09:52 AM 434

முன்னாள் பிரதமரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால், அவருக்கு உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 5.00 மணிக்கு வாஜ்பாய் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

Comment

Successfully posted