இலங்கையில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசிய முன்னாள் பெண் அமைச்சர் கைது

Oct 09, 2018 11:55 AM 782

இலங்கையில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசிய முன்னாள் பெண் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன், குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சராக இருந்து வந்தார்.

தமிழரும் பெண் அமைச்சருமான இவர், கடந்த ஜூலை 2-ம் தேதி விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறிய அவர்,அதற்காக விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும் என வலியுறுத்தினார்

விஜயகலாவின் இந்த கருத்துக்கு சிங்களர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜரான விஜயகலா கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted