நித்தியின் முன்னாள் சீடர் லெனின் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு

Jan 24, 2020 01:49 PM 266

பாலியல் வழக்கில் நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது சீடர் தொடர்ந்த வழக்கில் கர்நாடக சிஐடி காவல்துறையினர் பதிலளிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வழக்கில் நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது முன்னாள் சீடர் லெனின் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். லெனின் வழக்கை விசாரணைக்கு ஏற்ற கர்நாடக உயர்நீதிமன்றம்,  ஒரு வாரத்தில் நித்தியானந்தா மற்றும், கர்நாடக சிஐடி காவல்துறையினரும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில், பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவரை கைது செய்ய சர்வதேச காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Comment

Successfully posted