முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அதிமுகவில் இருந்து நீக்கம்

May 22, 2021 07:24 AM 840

கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக துணை செயலாளரும், செயற்குழு உறுப்பினருமான நிலோபர் கபீல் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கேட்டு கொண்டுள்ளனர்.

Comment

Successfully posted