குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் இன்று 4 பேர் கைது

Feb 03, 2020 08:59 PM 539

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் இன்று ஒரே நாளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு குரூப் 2ஏ தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வுகள் முறைகேடு செய்து அதிக மதிப்பெண்கள் எடுத்தது தொடர்பான வழக்கை குற்றப்புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 5 கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், குரூப்4 தேர்வில் முறைகேடு தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted