சுங்கச்சாவடியில் தங்கம் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது

May 05, 2019 07:14 AM 154

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்


சென்னை அண்ணாசாலையில் உள்ள அமித்திஸ்ட் என்ற நகைக்கடை சார்பில் மதுரையில் கடந்த மாதம் 26, 27அன்று நகை மேளா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை முடித்து விட்டு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை காரில் எடுத்து கொண்டு, கடையினர் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே காரில் வந்த ஒரு கும்பல் நகைகளோடு வந்த காரை வழிமறித்து போலீசார் போல் நடித்து 10கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதில் சென்னையை சேர்ந்த ராமசந்திரன், மணிகண்டன், ரமேஷ், முகமது அப்பாஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றவாளிகளிடம் இருந்து சுமார் 8கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

Comment

Successfully posted